201507140544422738_TASMAC-demand-the-relocation-of-the-shopCivilians-struggle_SECVPFபொன்னேரி அருகே குடிநீர் முறையாக வழங்கக் கோரி பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல். ஊராட்சி மன்றத் தலைவர் கிராமத்திற்கு வருவதில்லை என குற்றச்சாட்டு. போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு. ஆண்களை அடித்து இழுத்து சென்று கைது செய்தது போலீஸ்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்னம்பேடு பகுதியில் முறையான குடிநீர் வழங்கக் கோரி காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சின்னம்பேடு ஊராட்சியில் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவிக்க ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் ஊராட்சி மன்ற தலைவர் தங்களது கிராமத்திற்கு வராததால் ஆத்திரமடைந்த பெண்கள் சென்னையில் இருந்து சின்னம்பேடு முருகன் கோவிலுக்கு செல்லும் சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்கள் மற்றும் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் போலீசாரின் சமாதானத்தை ஏற்காத மக்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். இதனிடையே சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் விரைவில் கிராமத்திற்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனை ஏற்காத மக்கள் அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனிடையே மறியலை கலைப்பதற்காக போராட்டத்திற்கு துணையாக இருந்த ஆண்களை அடித்து இழுத்து சென்று போலீசார் கைது செய்தனர். குடி நீர் விநியோகிக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை போலீசார் அடித்து இழுத்து சென்று கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

adminதிருவள்ளூர்
பொன்னேரி அருகே குடிநீர் முறையாக வழங்கக் கோரி பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல். ஊராட்சி மன்றத் தலைவர் கிராமத்திற்கு வருவதில்லை என குற்றச்சாட்டு. போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு. ஆண்களை அடித்து இழுத்து சென்று கைது செய்தது போலீஸ். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்னம்பேடு பகுதியில் முறையான குடிநீர் வழங்கக் கோரி காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது....